பக்தி ஆல்பம் போடும் பாடலாசிரியர்!



பாடலாசிரியர்கள் சினிமாவுக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை தனிப் பாடல்களுக்கும் ஆல்பங்களுக்கும் தருவதுண்டு. அந்த வரிசையில் பாடலாசிரியர் செந்தமிழ் ‘செந்தமிழ்ப்பதிகம்’ என்ற பக்தி இசை ஆல்பம் வெளியிட்டுள்ளார். இவர் ‘மோசமான கூட்டம்’, ‘பொய்யாட்டம்’, ‘அதர்மம் 20/20’, ‘நளின காந்தி’, ‘மாட்டுக்கு நான் அடிமை’ போன்ற படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

‘‘பக்தி இலக்கியம் இருவகைப்பட்டது. தனித்தனி பதிகங்களால் பக்தி அனுபவங்களை வெளிப்படுத்துதல், பிரபந்தங்களாக வெளிப்படுத்துதல் என அவை இருவகையாக உள்ளன.பிரபந்தங்களுள் பெரும்பாலானவை அகத்திணை இலக்கணங்களுக்கு ஏற்ப அமைந்தவை. பதிகங்களிலும் பிரபந்தங்களிலும் அன்பின் ஐந்திணை தழுவி வந்தவை சிலவே.

ஏனைய பல கைக்கிளை, பெருந்திணை சார்ந்தவை. பக்திப் பேரன்பை உணர்த்த அவை பொருத்தமான திணைகள் என்பதே இதற்குக் காரணம் எனலாம். மேற்கண்ட கூற்றின்படி, பத்து பக்திப் பாடல்களை இந்த ஆல்பம் கொண்டுள்ளதால் இந்த ஆல்பத்துக்கு ‘செந்தமிழ்ப் பதிகம்’ என்று பெயர் சூட்டினேன். இசையமைப்பாளர்களில்,  ஸ்ரீகாந்த் தேவா, ஜஸ்டின் பிரபாபகர் ஆகியோர் ஆல்பத்தைப் பாராட்டியது எனக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது’’ என்கிறார் செந்தமிழ்.

- ரா