அதிதியின் சீக்ரட் ஆஃப் கொடியிடை!



ஃபேஷன் பேரடைஸ் ஆன பாரீஸுக்குப் பறந்து விட்டு வந்திருக்கிறார் அதிதி ராவ் ஹைதரி. ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்தவரேதான். மினுமினு ஸ்கின் விரும்பிகளுக்கு அதிதியின் டயட் & ஃபுட் சீக்ரெட்ஸ் ஒரு கைடு காக்டெயில். எப்போதும் ஆர்கானிக் உணவை விரும்பும் அதிதி சாப்பாட்டில் தினமும் முட்டை சேர்த்துக் கொள்வார். மல்லிப்பூ இட்லி ஒரு பிடிபிடிப்பார். பாதாம் பால் எக்ஸ்ட்ரா டம்ளர் ருசிப்பார்.

மதியம் பிரௌன் ரைஸுடன் சிக்கன், மட்டனுடன் ஒரு சப்புகொட்டுவார். ரொட்டி அண்ட் ஃபிஷ் இருந்தாலும் ஓகே டிஷ்தான். காய்கறி, பழங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அதிதியின் அட்டவணையில் உண்டு. ஷார்ட் ஆக சொன்னால் அதிதி ஒரு ஃப்ரெஷ் ஜூஸ் பிரியை.

- மைபா