சும்மா தெறிக்குதே!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

அட்டையில் துருவ் விக்ரமின் அறிமுக ஸ்டில்லே சும்மா தெறிக்குதே!
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.

நடுப்பக்கத்து ஹெபா பட்டேல் அப்படியே கவர்ச்சிக் குவியலாக கண்ணுக்கு விருந்தளித்தார்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

38 ஆண்டுகளாக ‘வண்ணத்திரை’யை வாசித்து வரும் தீவிர வாசகன் நான். என்னை நான் இன்னும் இளமையாக உணர்வதற்கு ‘வண்ணத்திரை’யே பிரதான காரணம்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

பத்து வருடம் வெயிட்டிங் மோடில் இருந்துவிட்டுதான் இப்போது ஆக்டிவ் மோடுக்கு மாறியிருக்கிறேன் என்று ‘டைட்டில்ஸ் டாக்’கில் எழுதியிருக்கும் ஆதவ் கண்ணதாசனுக்கு இனிமேல் வெற்றி மேல் வெற்றிதான்.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

தமிழ் சினிமா பிறந்ததற்கு ஓராண்டு முன்பே பிறந்துவிட்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான் கலைஞானம் அவர்களது பேட்டி பிரமாதம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நீண்ட காலத்துக்குப் பிறகு விஜய் பாபு பேட்டி வாசித்தேன். காணாமல் போனதற்கு நான்தான் காரணம் என்று சொன்னது அவரது நேர்மையை காட்டுகிறது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

சண்டைக்காட்சி மாதிரிதான் முத்தக்காட்சியும் என்று ஜஸ்ட் லைக் தட்டாக துருவ் சொல்லியிருப்பது சினிமா குறித்து எவ்வித பதட்டமும் இல்லாமல் இருக்கிறார் அவர் என்பதை எடுத்துச் சொல்கிறது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.