தமிழுக்கு டியூஷன் படிக்கும் அகன்ஷா!



‘விநாயகர்’ டி.வி தொடரில் பார்வதி வேடத்தில் நடித்த அகன்ஷா புரி, ‘ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார். இன்னும் அவரால் தமிழில் பேச முடியவில்லை. மற்றவர்கள் பேசினால் ஓரளவு புரிந்துகொள்கிறார். அவரைப் பற்றி இயக்குனர் சுந்தர்.சி சொல்லும்போது, “அகன்ஷா ஒரு பொம்பளை விஷால். வெளிநாட்டில் ஷூட்டிங் நடந்தப்ப, விஷாலுக்கு நிகரா ஆக்‌ஷன் சீன்களில் ‘ரோப்’பில் தொங்கி ஃபைட் பண்ணார்.

விஷால் கூட சண்டை போட்ட எல்லா நாளும் அகன்ஷாவுக்கு அடிபட்டது. ஆனா, எதையும் பொருட்படுத்தாம ரொம்ப ஆர்வமா சண்டை போட்டார்’ என்றார். தொடர்ந்து தமிழில் நடிக்க விரும்பும் அகன்ஷா புரிக்கு தமிழ் டியூஷன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தமிழில் பேசி நடித்து, டப்பிங் பேசுவேன் என்று சத்தியம் செய்துள்ளார்.

- தேவ்