வில்லி இல்லியாம்!



ராய் லட்சுமி இரு விதமான கெட்டப்பில் நடிக்கும் ‘சின்ட்ரெல்லா’ படத்தில், இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார் சாக்‌ஷி அகர்வால். இது வில்லி வேடம் என்று தகவல் பரவியுள்ளது. இது குறித்து கேட்டபோது, ‘இது ரொம்ப பவர்ஃபுல் கேரக்டர். வில்லி கேரக்டரான்னு பதில் சொல்ல முடியாது. ஆனா, இந்த கதைக்கு என் கேரக்டர் ரொம்ப, ரொம்ப அவசியம்.

படத்தை பார்த்த பிறகு ஆடியன்ஸ் என்ன சொல்றாங்களோ, அதுதான் என் கேரக்டர். அடுத்து, ஜி.வி.பிரகாஷ் குமார் கூட ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படம் பண்ணியிருக்கேன். இதுவும் எனக்கு நல்ல பேர் கொடுக்கும். கல்யாணத்துக்குப் பிறகு ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘டெடி’ படத்தில் முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்கேன்” என்கிறார் சாக்‌ஷி.

- ராஜ்