ராணி வேஷமா? அய்யோ.. வேணாம்!



சரித்திரப் படங்களில் நடிக்கக் கூடாது என திடீரென முடிவு செய்திருக்கிறாராம் அனுஷ்கா. ‘அருந்ததி’ படத்தில் பிளாஷ்பேக்கில் ராணி வேடத்தில் அவர் நடித்திருந்தார். ‘பாகுபலி’ படங்களின் இரண்டு பாகங்களிலும் அவர் சரித்திர கேரக்டரில் நடித்திருந்தார். ‘பாகுமதி’ படத்திலும் அவரது ஒரு கேரக்டர், ராணி வேடமாகும். ‘ருத்ரம்மா தேவி’ படத்திலும் அதுபோல் நடித்திருந்தார்.

இப்படி அடுத்தடுத்து பெரிய படங்களில் சரித்திர கேரக்டரில் நடித்துவிட்டு இனி அதுபோல் நடிக்க மாட்டேன் என அனுஷ்கா முடிவு செய்ததற்கு காரணம் ‘ருத்ரம்மா தேவி’ படம்தான் என்கிறார்கள். இந்த படம் முழுக்க அனுஷ்கா கேரக்டரை மட்டுமே நம்பி உருவான கதை. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

இந்தப் படத்தை அனுஷ்கா அதிகம் நம்பி இருந்தார். படம் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்தார். அப்போதே இனி சரித்திரப் படங்களில் நடிக்கக் கூடாது என அவர் முடிவு செய்துவிட்டாராம்.

இந்த மாதிரி படங்களுக்கு மேக்அப் போடுவதிலிருந்து உடைகள், நகைகள் என அணிவது வரை உடலுக்கு அதிக  சிரமம் தருவதால் அனுஷ்காவுக்கு பிடிக்கவில்லையாம். பெரிய இயக்குனர், பெரிய படம் என்ற பட்சத்தில் மட்டுமே சரித்திரக் கதையில் மீண்டும் நடிப்பதைப் பற்றி யோசிப்பாராம். அப்படி இல்லாதபட்சத்தில் ‘ருத்ரம்மா தேவி’ போல் இன்னொரு படத்தில் நடிக்க மாட்டாராம்.

- யா