போலீஸ்காரர் பொண்ணு!
தமிழ் இளசுகளின் நெஞ்சம் இப்போது ‘கஷ்மீரா கஷ்மீரா’ என்றுதான் அடித்துக் கொள்கிறது. ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்கிற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட்டின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். அடிப்படையில் ஃபேஷன் டிசைனரான கஷ்மீரா பர்தேஸி, தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.
“உங்க பின்னணி?”
‘‘என்னோட பூர்வீகம் மராத்தி ஃபேமிலி. அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர். மகாராஷ்டிராவில் உள்ள புனேவில்தான் பிறந்து வளர்ந்தேன். ஒரே தம்பி. சின்ன வயசில இருந்து ஃபேஷன் டிசைனிங்ல ஆர்வம். அதனாலேயே டிசைனராக விரும்பினேன். மும்பையில் உள்ள நிஃப்ட்லதான் டிசைனிங்ல கோர்ஸ் முடிச்சேன்.
ரெண்டு வருஷ கோர்ஸ் அது. ஃபைனல் இயர் படிக்கும் போதுதான் ஹாபியா மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். அதே டைம் படிப்பிலும் கில்லி. குட் ஸ்டூடண்ட்னால எல்லாருமே நான் நல்லதொரு ஜாப்ல உட்காருவேன்னு நினைச்சாங்க. நான் ஆக்ட்டிங் ட்ரை பண்றது பத்தி வீட்ல சொன்னதும் மொதல்ல ஷாக் ஆனாங்க.
அப்புறம், ‘உனக்கு ஒரு வருஷம் டைம் தர்றோம். அதுக்குள்ள சான்ஸ் அமையலைன்னா.. நடிப்பு ஆசையை விட்டுடணும்’னு கண்டிஷன் போட்டுட்டாங்க. அதை சேலஞ்சிங்கா எடுத்துட்டு ட்ரை பண்ணினேன். மும்பைக்கு போய் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டானேன். நிறைய கத்துக்கிட்டேன். ஆனா, சினிமா சான்ஸ் தேடி வரல. வீட்ல விதிச்ச கெடுவும் நெருங்கினதால, ஆக்ட்டிங் ஸ்கூல்ல இருந்து என் ஆசைகளையும் சேர்த்து பேக் பண்ணிட்டு ஊருக்கே திரும்பிப் போக நினைச்சேன். அந்த டைமல்தான் மிராக்கிள் நடந்தது.
என் தாய்மொழியான மராத்தியில் இருந்து ‘ராம்பாட்’ பட வாய்ப்பு வந்தது. ஆடிஷன் போனேன். செலக்ட் ஆனேன். அந்த டைம்லதான் தெலுங்கு ஆஃபர்ஸ் வந்தது. நாகசௌரியாவின் ‘நர்த்தனசாலா’வில் அறிமுகமானேன். டோலிவுட்ல என் முதல்படமே ஹிட். போன வருஷம்தான் ரிலீஸ் ஆச்சு. ‘நர்த்தனசாலா’வின் ஷூட்ல இருக்கும் போதுதான் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ வாய்ப்பும் வந்தது. சந்தோஷமா இருக்கு.’’
“தமிழ் சினிமா பிடிச்சிருக்கா?”
“ரொம்பவே. இங்கே தொடர்ந்து படங்கள் பண்ண விரும்புறேன். ‘பிச்சைக்காரன்’ தெலுங்கு வெர்ஷன் பார்த்திருக்கேன். சசி சார் பிரில்லியண்ட் டைரக்டர். தமிழ்ல என் முதல் படமே சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்னு நல்ல ஹீரோக்கள் காம்பினேஷன்ல அமைஞ்சது சந்தோஷமா இருக்கு. இந்தப் பட ஆடிஷனுக்கு ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்தேன்.
ஆடிஷன் முடிச்சதும் ஆக்ட்டிங் ஒர்க்ஷாப் நடந்தது. அடிக்கடி சென்னை வந்தேன். ஜி.வி. பிரகாஷ் ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகினார். நான் படபடப்பா இருந்தாலும் கூட, ஜிவி. ஜோக்ஸ் சொல்லி என்னை கூல் ஆக்கிடுவார். டோலிவுட் மாதிரிதான் கோலிவுட்டும் இருக்கு. இப்ப தெலுங்கு ஓரளவு புரிஞ்சுக்கறேன். அடுத்தடுத்து தமிழ்ல நடிக்கும் போது சரளமா பேச ஆரம்பிச்சிடுவேன்னு நினைக்கறேன்.”
“சினிமா தவிர்த்து என்ன பிடிக்கும்?”
“டிராவலிங், பெயிண்டிங் பிடிக்கும். டைம் கிடைக்கும் போது நிறைய வரைவேன். வீட்ல இருந்தா என் செல்ல நாய்க்குட்டி ஷிரோவைக் கொஞ்ச பிடிக்கும். புனேவில் உள்ள எஃப்.சி. ரோடில் ஷாப்பிங் பண்ண பிடிக்கும். அங்கே ஷாப்பிங் பண்ணும் போதெல்லாம் நான் காலேஜ் ஸ்டூடண்டாகவே மாறிடுவேன். அப்படி ஒரு பவர் அந்த ஸ்ட்ரீட்ல இருக்கு. ட்ரை ஃபுரூட்ஸ்னா கொஞ்சம் இஷ்டம்.
ஷூட்டிங் டைம்ல அதான் என் பிரேக்ஃபாஸ்ட்டும் கூட! அப்புறம், என் ஹேண்ட்பேக்கில் எப்பவும் ஒரு சின்ன டைரி வச்சிருப்பேன். எனக்கு தோணினதை உடனே அதில் நோட்ஸ் எடுத்துக்குவேன். காலேஜ் டேஸ்ல இருந்து அதை கடைப்பிடிக்கறேன். நாவல்கள் படிக்க பிடிக்கும். ஹெமிங்வேஸ் கலெக்ஷன் வச்சிருக்கேன்.”
“வித்யாபாலனின் மகளா ‘மிஷன் மங்கல்’ படத்தில் நடிச்சீங்களே?”
“ரெண்டு படங்கள்தான் பண்ணியிருக்கேன். இந்த குறுகிய டைம்ல பாலிவுட் போயிட்டேன். என்னோட ட்ரீம் நனவாகியிருக்கு. அதுவும் அக்ஷய், வித்யா மேம், டாப்ஸி, நித்யாமேனன், சோனாக்ஷினு டாப் ஆர்ட்டிஸ்ட்களோடு ஒர்க் பண்ணினது ஹேப்பி மொமண்ட்ஸ்.
‘மிஷன் மங்கல்’ல வித்யாபாலனின் மகளா நடிச்சது சந்தோஷமா இருக்கு. வித்யா மேம் லவ்லி பர்சன். ரொம்ப நல்லா பழகுவாங்க. முதல்நாள் ஷூட்ல அவங்க ரொம்ப சீனியர்னு பயந்தேன். ஆனா, அவங்களோ ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகி, அசத்திட்டாங்க. படத்தோட பிரிமியர் ஷோ கூட அவங்களோடதான் பார்த்து ரசிச்சேன்.”
- மை.பாரதிராஜா
|