விபரீத மீன்கள்!‘சேட்டைத்தனம்’, ‘வென்று வருவான்’  போன்ற படங்களைத் தயாரித்து கதாநாயகனாக நடித்த கே.சுரேஷ் தயாரித்து இயக்கி நடிக்கும் படம் ‘கானல்’. கதாநாயகியாக குஜராத்தைச் சேர்ந்த குல்பி ரேகா நடிக்கிறார். வில்லனாக ‘பருத்திவீரன்’ சரவணன் நடிக்கிறார். காமெடிக்கு கஞ்சா கருப்பு, முத்துக்காளை, சிசர் மனோகர் இருக்கிறார்களாம். ஒளிப்பதிவு பகவதி பாலா. இசை கார்த்தி கிருஷ்ணா.

ஒரு மீனவக்குப்பத்தில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார் நாயகன். அதே குப்பத்திலுள்ள தாதா, பிடிக்கும் மீன்களையெல்லாம் என்னிடமே கொடுக்க வேண்டும், நானே விற்பனை செய்வேன் என்கிறான். இதனால் வில்லன் ஆட்களுக்கும் கதாநாயகனுக்கும் பிரச்சனைகள் அடிக்கடி உருவாகிறது. ஒரு சமயம் வில்லனின் குடோனுக்கு செல்கிறான் நாயகன்.

அங்கே மீன்களில் போதைப் பொருட்கள் பதுக்கி கடத்தி வருவது தெரிகிறது. இது எவ்வாறு வெளிச்சத்திற்கு வருகிறது, . இதன் மூலம் நாயகன் சந்திக்கும் பிச்சனைகள் என்ன என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளார்களாம்.

‘‘இது எனக்கு ஹாட்ரிக் முயற்சி. தயாரித்து நடிப்பது எனக்கு சவாலாக இருந்தாலும் எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்’’ என்கிறார் கே.சுரேஷ்.

- ரா