சைக்கோ திரில்லர் எடுக்கிறார் நியூட்டன் பிரபு!குறும்படங்களை இயக்கிவிட்டு வெள்ளித்திரைக்கு வந்துள்ளார் நியூட்டன் பிரபு. படத்துக்கான டைட்டில் முடிவாகாத நிலையில்  ஜாக்குவார் தங்கம் ,ரோபோ ஷங்கர், ‘எழுமின்’ விஜி ஆகியோர் முன்னிலையில் பூஜையுடன் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்.படத்தைப் பற்றி இயக்குனர்  நியூட்டன் பிரபு கூறுகையில், ‘‘இது சைக்கோ திரில்லர்  ஜானர்ல உருவாகும் படம். நாயகனாக டி.வி. தொகுப்பாளர் தணிகை நடிக்கிறார்.

நாயகியாக குயின்ஸ்லி அறிமுகமாகிறார். வில்லனாக பாண்டி கமல் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். சம்சத் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தார்த்தா பிரதீப் இசை அமைக்கிறார்.ஏராளமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக  பணியாற்றியுள்ளேன். சில குறும்படங்களை இயக்கியுள்ளேன். பிரபல ஊடக நிறுவனம் ஒன்றில் சவுண்ட் இன்ஜினியராகவும்  பணியாற்றியுள்ளேன்.

இந்த அனுபவத்தைக் கொண்டும் இதன்மூலம் ஏற்பட்ட நட்பை வைத்தும்  நண்பர்களை ஒன்றிணைத்து  இந்தப்படத்தை நானே இயக்கி தயாரிக்கிறேன். இந்தப் படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் சைக்கோ த்ரில்லராக இருக்கும்’’ என்றார்.

- ரா