வாசிப்பு!சரோஜாதேவி பதில்கள்

* புல்லாங்குழல் வாசித்தால் அதிகமாக பால் கறக்கலாம் என்று அஸ்ஸாம் எம்.எல்.ஏ ஒருவர் யோசனை கூறியிருக்கிறாரே?
- சுவாமி சுப்பிரமணியா, குனியமுத்தூர்.
வாசிப்பு மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தைப் பாராட்டுவோம்.

* இளம் பெண்கள் வயதான ஆண்கள் மீதும், இளம் ஆண்கள் வயதான பெண்கள் மீதும் ஈர்ப்பு கொள்கிறார்களே?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
நீண்டகால அனுபவத்தை மதிக்கிறார்களோ, என்ன எழவோ?

* சாண் ஏறினால் முழம் சருக்குதே?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
கையிலே எண்ணெய் தேய்ச்சுக்கிட்டு ஏறுறீங்களோ?

* பெருமழையை எதிர்ப்பார்த்து வெறும் தூறலாய் போனால்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
பல்லு குத்த உலக்கையை எதிர்ப்பார்க்கலாமா? எதிர்ப்பார்ப்பற்ற வாழ்வே நிம்மதியான வாழ்வு.

* புத்தகத்தைப் புரட்டுவது; பெண்ணைப் புரட்டுவது : ஒப்பிடவும்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இரண்டையுமே ஆழமாகப் புரட்டினால் புதையல் நிச்சயம்.