சூப்பரோ சூப்பர்!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

எப்படி இருக்கிறார் புன்னகை அரசி என்று கேட்டு கே.ஆர்.விஜயா பற்றி ஒரு மினி பயோகிராபியை தந்து அசத்தி விட்டீர்கள். உமக்கு புன்னகைகளும், பூங்கொத்துகளும் உரித்தாகட்டும்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நடுப்பக்க மேட்டில் ஏறி, பள்ளத்தில் விழுந்துவிட்டேன். இன்னும் மீளவே முடியவில்லை.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

சரோஜாதேவி பதில்கள் சூப்பர் என்றால், அதற்கு லே-அவுட்டுக்கு தேர்ந்தெடுக்கும் படங்கள் சூப்பரோ சூப்பர்.
- விஜயராகவன், பழனி.

கடைசிவரை ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன், வில்லியாக நடிக்க மாட்டேன் என்கிற இந்துஜா ரவிச்சந்திரனின் கொள்கைக்கு ஒரு சல்யூட்!
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

ரொம்ப சுமாரான படங்களைக்கூட தாக்கி வீழ்த்திவிடாமல் தாங்கி தட்டிக் கொடுத்து விமர்சிக்கும் ‘வண்ணத்
திரை’யே நீ வாழ்க!
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

முன்னட்டை மற்றும் பின்னட்டை சந்தனா, சும்மா சந்தனக்கட்டை கணக்காக பார்க்கும்போதே மணக்கிறார்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

இந்துஜா முதலில் பிகினி போடட்டும். அவருக்கு பொருந்துகிறதா இல்லையாவென்று நாங்கள் முடிவெடுக்கிறோம். எனக்கு நல்லா இருக்காது என்று முடிவெடுப்பதற்கு அவர் யார்?
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.