சிலையைத் தேடி!அறிமுக நாயகன் நிஷாந்த் நடித்துள்ள படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. இப்படத்தை டார்க் காமெடியாக இயக்கியுள்ளார் பாலா அரன்.கதைக்களம் தமிழ் சினிமாவின் அரிதான ‘புதையல் வேட்டையை’ மையமாகக் கொண்டது. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையைத் தேடிச் செல்லும் பயணமே இந்தப்படத்தின் கதை.

பலர் இந்த சிலையைத் தேடிக் கொண்டிருக்க, அது குறித்த ஒரு முக்கிய குறிப்பு நாயகனை வந்தடைகிறது. இதை தெரிந்து கொண்ட இருவர் நாயகனைத் துரத்த, சுவாரஸ்யமான திருப்பங்களுக்குப் பின்னர் சிலையை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை காமெடி கலந்து சொல்லியுள்ளார்களாம்.

‘‘முழுக்க முழுக்க நகைச்சுவையோடு உருவாகியிருக்கும் இந்தப் படம் இதுவரை அணுகப்படாத விலக்கப்பட்ட அல்லது இருண்ட காமெடி வகையைச் சார்ந்ததாக இருந்தாலும், ஜனரஞ்சகமாக தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் படமாக்கியுள்ளேன். ஒரு நல்ல கதைக்களத்திற்கு உரிய வரவேற்பையும், ஆதரவையும் தமிழ்த் திரையுலகம் எப்போதும் கொடுத்து வருகிறது என்பதால்  படத்தில் முழுவதுமே புதுமுகங்களை நடிக்க வைத்துள்ளேன்’’ என்கிறார் இயக்குநர் பாலா அரன்.

- ரா