தாராளமயமாக்கல்!சரோஜாதேவி பதில்கள்

* காதலியிடம் எதை காட்ட வேண்டும்? எதை காட்டக்கூடாது?
- என்.இன்பா, திருவண்ணாமலை.
கோபம் காட்டக்கூடாது. எதைக் காட்ட வேண்டும் என்பது தெரியாமலேயே காதலிக்கிறீர்களா இன்பா?

* இலைமறை காய்மறையான விஷயங்களை இன்று இலை போட்டு பந்தி பரிமாறுகிறார்களே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
தாராளமயமாக்கல் சூழலில் வாழுகிறோம் அல்லவா? அப்படித்தான் இருக்கும்.

* அப்போதெல்லாம் முன்னழகு, பின்னழகு, கண்ணழகு, இடையழகு, தொடையழகு என்றெல்லாம் தனித்தனியாக ரசிப்போம். இப்போது?
- கே.கே.பி.மணியன், பெங்களூரு.
அப்போதெல்லாம் எதையுமே காட்டமாட்டார்கள். கற்பனையில் ரசித்தோம். இப்போது அப்படியா?

* காட்டில் மழை - கட்டில் மழை; என்ன வேறுபாடு?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
முந்தைய மழை சூட்டைத் தணிக்கும். பிந்தையது கிளப்பும்.

* படுக்கையறைக்கு ஏன் பள்ளியறை என்று பேர் வந்தது?
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
இங்கேயும் பாடம் படிப்பதால் இருக்குமோ?