கொஞ்சம் கொஞ்சமா..ரீடர்ஸ் கிளாப்ஸ்!

33ஆம் பக்க ரகுல் ப்ரீத்சிங்கின் கோலிக்குண்டு கண்ணு ரொம்பவே பெருசு சார். ரொம்ப நேரமா பார்த்துக்கிட்டே இருந்தேன்.
- கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்.

நடிகர் கூல்சுரேஷ், நடிப்புலேதான் காமெடி. நிஜத்துலே தத்துவமா பொழிஞ்சி தள்ளுறாரு. ‘இனிமே இப்படித்தான்’ என்கிற தலைப்பில் அவரது ‘டைட்டில்ஸ் டாக்’ கட்டுரை அருமை.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘புடவையை கொஞ்சம் கொஞ்சமா உயர்த்துவதுதான் கிளாமர்’ என்று பிரியங்கா ரூத், கவர்ச்சிக்கு சொல்லியிருக்கும் புதிய வரையறை சூப்பர் சார்!
- கே.முருகன், திருவண்ணாமலை.

அட்டை டூ அட்டை வாசகனுக்கு விருந்து வைக்கும் ஒரே வார இதழ் நம்ம ‘வண்ணத்திரை’தான்.
- எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்.

எது எப்போ நடக்குமோ, அது கண்டிப்பா நடந்தே தீரும் என்கிற தெளிவு இருக்கும் வரை வேதிகாவை யாரும் அடிச்சிக்க முடியாது.
- பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.

மைக்கேல் ஜாக்சனாக யோகிபாபு, அம்பேத்கராக சமுத்திரக்கணி என்று புதிய சினிமா தகவல்களை அள்ளித் தருவதில் என்றுமே ‘வண்ணத்திரை’க்குத்தான் முதலிடம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ஏனுங்க, இத்தனை வருஷமா நடுப்பக்கத்துலே கவர்ச்சி மீன்களைக் காட்டி காளையருக்குத்தான் வலை விரிச்சீங்க. இப்போ ‘ஜொலிக்குது நெக்லஸ்’னு படம் போட்டு அட்சயதிருதியை டைமில் பெண்களையும் கவர்ந்திட்டீங்களே!
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.