மீண்டும் அரண்மனை!‘காஞ்சனா-3’ படத்தின் அதிரிபுதிரி வெற்றி ஓய்ந்திருந்த பேய்களை மீண்டும் லைம்லைட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது. அவ்வகையில் ‘அரண்மனை’ வரிசையில் இரு பாகங்கள் எடுத்த சுந்தர்.சி-யும் மூன்றாவது பாகத்தை எடுக்க களமிறங்கி இருக்கிறார்.
ஏற்கனவே ஹிட்டடித்த படங்களின் அடுத்தடுத்த பாகங்களுக்கு வசூல் உத்தரவாதமாகக் கிடைக்கிறது என்பதாலும் சுந்தர்.சி இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். ஏற்கனவே, ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இப்போது விஷால், தமன்னா நடிக்கும் படத்தின் வேலைகளில் பிஸியாக இருப்பவர், அது முடிந்ததுமே ‘அரண்மனை-3’ வேலைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த ஹன்சிகா, இரண்டாம் பாகத்தில் நடித்த திரிஷா இருவரையும் இணைத்து மூன்றாம் பாகம் தயாராகலாம் என்று கிசுகிசுக்கிறார்கள் சுந்தருக்கு நெருக்கமானவர்கள்.

- யுவா