அலைபேசி



காதல் கோட்டை காலத்து கதை!

ஹீரோவும், ஹீரோயினும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே ‘காதல் கோட்டை’ கட்டுகிறார்கள்.சிவில் என்ஜினியர் அகில். இன்சூரன்ஸ் ஊழியர் அனுகிருஷ்ணா. அலைபேசி மூலம் நண்பர்களாகிறார்கள். ஒருகட்டத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே லவ்வுகிறார்கள்.

முறைமாமனோடு அனுகிருஷ்ணாவுக்கு நிச்சயம் ஆகிறது. கல்யாணம் நின்று அனுவின் காதல் கைகூடியதா என்பதே விறுவிறுப்பான கிளைமேக்ஸ்.அகில், ஹீரோவாக கவனிக்க வைக்கிறார். அனுகிருஷ்ணா, ஓரிரு காட்சிகளில் ஓக்கே. இவர்கள் இருவரையும் தவிர வேறெந்த கேரக்டரும் மனதில் ஒட்டாதது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

செல்வதாசன் இசையில் கானா பாலா பாடியுள்ள ‘ஏன்டா இந்த லவ்ல’ பாட்டு ரசிக்க வைக்கிறது. மோகனின் ஒளிப்பதிவு கச்சிதம்.நகைச்சுவைக் காட்சிகளில் சிரிப்பே வரவில்லை. படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப தன்னால் முடிந்தவரை நிறைவாக செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குநர் முரளிபாரதி.