வித்தைக்காரி! மெத்தைக்காரி!!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘மை கண்ணி மசால் வடை, மாமனுக்கு என்ன தர்றே?’, ‘முயல் குட்டி மூலக்கடை ரொட்டி’, ‘அழகான பள்ளத்தாக்கு ஆழம் பார்த்து போட்டுத் தாக்கு’ன்னு ப்ளோஅப் கமெண்டெல்லாம் சும்மா அதகளப்படுத்துதே தலைவா! கமெண்டு எழுதறவருக்கு திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைங்க.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

நிமிர்ந்த நெஞ்சும், தேர்ந்த நடிப்பும் நிறைந்த பூர்ணா பேய்ப்படத்தில் நடிப்பது அறிந்து யாம் கண்கலங்கினோம். அவர் தேசிய கட்சியின் மாநிலத் தலைவியாக உருவெடுக்க எம்முடைய பரிபூரண ஆசீர்வாதங்கள்.
- சுவாமி சுப்பிரமணியா, பெங்களூரு.

பதில்களால் மயக்கும் வித்தைக்காரி. பருவத்தை பறிமுதல் செய்யும் மெத்தைக்காரி. எங்கள் சரோஜாதேவியின் புகழ் வானமளவுக்கு ஓங்குக.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

பாடகர்களுக்கும், கவிஞர்களுக்கும் வேடந்தாங்கலாய் மாறும் இசையமைப்பாளர் தஷி அவர்களுக்கு வாழ்த்துகள்.
- எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்.

தல பிறந்தநாளுக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த பழைய பேட்டியை பாலீஷ் போட்டு வெளியிட்டு தல ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்திவிட்டீர்கள். அது!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சீனியர் நடிகை என்கிற அடையாளம் கவுரவம் மட்டுமல்ல, திறமையின் வெளிப்பாடு என்பதையும் செயலில் காட்டும் ஜோதிகா, உண்மை உழைப்பின் உறைவிடம்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

சினிமாவில் எல்லாமே டைம்தான் என்று யதார்த்தத்தை வெளிப்படுத்திய அனுபவ இயக்குநர் சி.வி.ராஜேந்திரனின் கருத்து, இந்தத் தலைமுறை சினிமாக்காரர்களுக்கு அருமருந்து.
- குந்தவை, தஞ்சாவூர்.