அதிகாலை அற்புதக் காட்சி!சரோஜாதேவி பதில்கள்

* மார்னிங், மேட்னி, ஈவ்னிங், நைட். நாலு காட்சிகளில்
எந்தக் காட்சியில் படம் பார்க்கலாம்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
நான்குமே அல்ல. அதிகாலை காட்சியில்தான் அற்புதம் தெரிகிறது என்பது அனுபவஸ்தர்களின் கருத்து.

* இரவுக்கு ஆயிரம் கண்களா...?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
நோ... மூடநம்பிக்கை. பகலில் கண்களும், இரவில் கைகளும் சிறப்பாகச் செயல்படும்.

* திடீர் திடீரென சில பெண்கள் குண்டாகிறார்களே?
- கே.கே.பாலசுப்ரமணியன், பெங்களூரு.
உண்டானால் குண்டாவது இயல்புதான்.

* ஆண் vs பெண். இருவரின் வெட்கத்திலும் என்ன வேறுபாடு?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஆணுக்கு வெட்கப்படுவது போல நடிக்கக்கூடத் தெரியாது.

* ஐபிஎல் பார்க்கிறீர்களா?
- கார்த்திகேயன், ஜோலார்பேட்டை.
பேட்டைச் சுழற்றியடித்தால் பந்து பறக்கிறது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.