வாய்தான் கிழியும்!
சரோஜாதேவி பதில்கள்
* சன்னிலியோன் இப்பவும் கன்னியாகவே தெரிகிறாரே, எப்படி? - கே.நடராஜன், திருவண்ணாமலை. நீங்கள் எதைப்பார்த்து அவரது கன்னித்தன்மையை அளவிட்டிருக்கிறீர்கள் என்பது தெரியலையே, ப்ரோ.
* சென்ஸார் போர்டு தேவையா? - த.சத்தியநாராயணன், அயன்புரம். நம்ம மரத்து மாங்காயை இலை மறைக்காவிட்டால் கண்டவனும் கல்லெடுத்து அடிப்பானே?
* இப்போது உதட்டைப் பார்த்துக்கூட ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்களாமே? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. இன்னும் எது, எதையெல்லாம் பார்த்து எதிர்காலத்தை கணிப்பார்களோ தெரியவில்லை.
* கோடையில் ஜில்லுன்னு ஒரு மெசேஜ் சொல்லு சரோ? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. ‘அந்த’ மேட்டரின் கிளைமேக்ஸ் இன்பம் ஆண்களுக்கு வெறும் 14 நொடிகளும், பெண்களுக்கு 20 நொடிகளும் மட்டும்தான். ஒரு நிமிஷம்கூட நீடிக்காத ஒன்றுக்காக எவ்வளவு அக்கப்போரு?
* களியாட்டத்தில் கில்லிகள் ஆண்களா, பெண்களா? - ச.கார்த்திக், சிங்காநல்லூர். ஆண்கள் அட்டக்கத்திகள். சும்மா வாய்தான் நாலு ஊருக்கு கிழியும்.
|