இராம.நாராயணன் இயக்கும் ‘சிவா பூஜையில் கரடி’ படத்தில் ‘பதினாறு’ சிவா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக உதயதாரா நடிக்கிறார்.
சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் ‘ஏழாம் அறிவு’ படத்துக்காக ஒரு பாடலை 1000 நடனக் கலைஞர்களை வைத்து படமாக்க வுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அருண் விஜய் நடிக்கும் படம் ‘தடையறதாக்க’. இதில் பிரபல இந்தி நடிகை ப்ராச்சி தேசாய் நடிக்கிறார். இவர் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பை’ படத்தில் அஜய் தேவ்கான் ஜோடியாக நடித்தவர்.
உதயா தயாரித்து நடிக்கும் படம் ‘ரா ரா’. இதில் திருவள்ளுவரின் அறத்துப்பாலிலிருந்து ஒரு பகுதியை பாடலாக பயன்படுத்தி யுள்ளார்களாம்.
மிகப்பெரிய சொகுசு பங்களா கட்டிய பிறகும் ராசி கருதி அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் சினேகா.
‘தங்கபாம்பு’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் பாலமுருகன் அடுத்து ‘ஆவிகள் உலகம்’ திகில் படத்தை தயாரித்து இயக்கவுள்ளார். ஆவிகள் பற்றிய பல தகவல்களை சேகரித்துள்ள இவர், ஆவிகளிடம் பேசும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளாராம்.
எஸ்