இசையமைத்த ‘சீடன்’, ‘பவானி’ படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆன மகிழ்ச்சியில், ரிக்கார்டிங், ஷூட்டிங் என்று பரபரப்பாக இருந்த தினாவிடம் ஒரு மினி பேட்டி.
தற்போது இசையமைக்கும் படங்கள்?‘மாசி’, ‘விடியல்’, ‘மேதை’, ‘நரன்’, ‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்’, ‘இரவும் பகலும்’, ‘பாசக்கார நண்பர்கள்’.
திடீர்னு நடிக்க ஆரம்பித்துவிட்டீர்களே?‘சூழ்நிலை’ படத்தின் தயாரிப்பாளர் செந்தூரன் என்னுடைய நண்பர். அந்தப் படத்துக்கு நான்தான் இசை. கம்போஸிங், ரிக்கார்டிங் என்று ஒவ்வொரு வேலை நடக்கும் போதும் நடிக்க அழைத்தார்கள். அவர்களின் பிடிவாதத்தால் சம்மதித்தேன். கேமரா முன் நின்ற போதுதான் நடிப்பின் கஷ்டம் தெரிந்தது.
மும்பையின் கொடூர வில்லனாக நடித்துள்ளேன். இசையில் என்னுடைய ஸ்டைலை கதை தீர்மானிக்கிறது. எந்தப் படமாக இருந்தாலும் என்னுடைய முதல் படம் போல் முழு வேகத்துடன் வேலை செய்து வருகிறேன்’’.
ரா