ஆணவம் அகற்று
சாப்ட்வேர் என்ஜினியர்கள் ஷாட் பிலிமும் எடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் கோபகுமார். நட்புக்குள் ஆணவம் கூடாது என்பதுதான் இவர் இயக்கியுள்ள ‘The ballad of the waves’ குறும்படத்தின் மையக்கரு. இதில் நடித்திருக்கும் குரு, பர்கின், சுனில், வினோத், மகேஸ்வரன், ரமேஷ் என்ற அனைவரும் ஐ.டி.பீல்டை சேர்ந்தவர்கள்தான். ஏ.ஆர்.ரஹ்மானிடம் கிடார் வாசிக்கும் சஞ்சீவ் டைட்டில் இசை அமைத்துள்ளார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த குறும்படத்தை vimeo.com , you tube.com ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம்.
‘நச்’னு வேணும்‘ரன்’ முதல் ‘பையா’ வரை லிங்குசாமியிடம் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த பாலகிருஷ்ணனை நடிகராக மாற்றிய படம் ‘பட்டாளம்’. அதன் பிறகு ‘கூத்துப் பட்டறை’யில் பயின்று தகுதியை வளர்த்துக் கொண்டார். ‘மாத்தியோசி’, ‘நான் மகான் அல்ல’, ‘தூங்கா நகரம்’ படங்கள் நல்ல முன்னேற்றத்தை கொடுத்தது. தற்போது ‘எத்தன்’, ‘தாண்டவக் கோனே’, ‘வித்தகன்’, தரணி உதவியாளர் இயக்கும் படங்களில் நடிக்கும் இவருக்கு ஒரு சீனில் நடித் தாலும் ‘நச்’னு தெரிய வேண்டும் என்பது தான் விருப்பமாம்.
ஐவர் விமர்சனம்உயிர் நண்பர்களான ஸ்ரீமன், ஹரீஸ் இருவரும் ஒரு கட்டத்தில் பிரிகிறார்கள். பிரிந்த இவர்களின் நட்பை விஜய் ஆனந்த், ஏலா, பேரரசன், ஹுசைன் ஆகிய நண்பர்கள் குழு எப்படி சேர்த்து வைக்கிறது என்பதுதான் கதை. குட்டி தேவதையாக உள்ளம் கவர்கிறார் நாயகி அதுல்யா. கவி பெரியதம்பி இசையில் ‘மல்லிகா...’ பாடல் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறது.நட்பின் பெருமையை போரடிக்காமல் சொல்லி யிருக்கிறார் ப்ரியன்.