நயமாக இருந்தது நைனா




Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

ல நாட்டு விருதுகள், பல நாடுகளில் ‘பசங்க’ படம் பங்கேற்றுள்ளதைப் படிச்சு பிரம்மித்தேன். தமிழ்ப் படங்கள் மேலோங்கி வருவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
எஸ்.வந்தனா, தேனி.

தெலுங்கு நடிகர்கள் வாங்கும் சம்பளத்தைப் பத்தி சிபியார் தந்த பதில் படித்து என்னோட வாயை பொளந்துட்டேன் நைனா.
 ஜி.டி.குருமூர்த்தி, சென்னை-12.

நூற்றுக்கணக்கில் நமீதா அம்மணி ஹேண்ட்&பேக் வைத்துள்ளதைப் படிச்சேன். இன்னும் வேற என்ன என்ன சேர்த்து வச்சிருக்காங்கனு கேட்டு சொல்லு அப்பு.
 வீ.பால்பாண்டி, மதுரை.

ரித்திரக்கதை ‘பொன்னர் சங்கர்’ படத்தைப் பத்தி நாயகன் பிரசாந்தின் பேட்டி நயமாக இருந்தது.
 சி.எஸ்.ரவி, புதுச்சேரி.

தமன்னா நடிச்ச பெரும்பாலான படங்கள் கேரக் டர் பெயரை ஆங்கிலத்துல எழுதினா ‘கி’ன்னு முடிகிறதை பத்தி ஆராய்ச்சி செஞ்சு வெளி யிட்டுள்ளது சூப்பர் சார்!
 மு.கந்தசாமி, நெல்லை.