சரக்குக்கு ஊறுகாய் மாதிரி...



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

ஆன்மீக அரசியலில் களமிறங்கப் போகும் ரஜினியின் ஆரம்பகால மக்கள்நல அக்கறையை வெகுபிரமாதமாய் வெளிச்சம் போட்டுக் காட்டிய ‘பிலிமாயணம்’ அபாரம்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

அந்நாளைய முதிர்கன்னி நடிகைகளைப் போல ‘நிறை நெஞ்சம்’ கொண்டவர்கள் இந்நாளிலும் இருக்கிறார்கள் என்பதே ‘வண்ணத்திரை’யை வாசித்தால்தான் தெரிகிறது. நன்றி.
- கே.கே.பாலசுப்பிரமணியன், கோயமுத்தூர்.

‘பத்மாவதி’ படத்துக்கு ‘கற்புக்கரசி’யென்றே டைட்டில் வைத்திருந்தால் தேவையற்ற சர்ச்சைகள் வந்திருக்காது. விமர்சனம், பிரமாதம்.
- உமரி பொ.கணேசன், மும்பை-37.

‘கன்னத்துலே சிவப்பு கழுத்துலே வனப்பு’ என்று தக்‌ஷாவுக்கு நீங்க கொடுத்த காம்ப்ளிமென்ட் ரியல்லி சூப்பர்ப்...
- கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘சவரக்கத்தி’ பூர்ணாவின் பேட்டி அருமை. கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதாய் அவர் கொடுத்திருக்கும் வாக்குறுதி நிறைவேறட்டும்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

முன்புறம் திரண்டு உயர்ந்து நிற்கும் இரு உதடுகள்தான் பூர்ணாவிடம் பூரணமானவை. அவை ஒருபுறமிருக்க பூர்ணா புதுப்புது சாதனைகளை திரையில் நிகழ்த்த எம் பரிபூரண ஆசிகள்.
- சுவாமி சுப்ரமணியா, பெங்களூரு.

தாறுமாறாகக் கிழிந்து தொங்கும் பல்லவியின் நடுப்பக்க வண்ணப்படம் சரக்குக்கு ஊறுகாய் மாதிரி செமத்தியான சைட் டிஷ்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.