ஜூலை மாதம் வந்தால்...



தமிழகத்தையே உலுக்கிய ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டதின் மூலம் புகழ்பெற்றவர். அந்தப் புகழை மூலதனமாக்கி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி, மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டவர்.

புதியதாக வாங்கிய நாய்க்குட்டி பெண்ணாக இருந்தால் அவரது பெயரைத்தான்  செல்லமாக வைப்பார்கள். சமீபத்தில்  ‘கிங் வகையறா’ படத்தில் தம்மாத்தூண்டு காட்சியில் தலை காட்டியிருக்கிறார். ஏற்கனவே சில குறும்படங்களிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

சில சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை போல பந்தா செய்வதாக படப்பிடிப்புக் குழுவினர் புலம்பித் தள்ளுகிறார்கள். போன் ரிங்கை எடுத்ததுமே “எதுவா இருந்தாலும் என் மேனேஜர் கிட்டே பேசிக்குங்க” என்கிறாராம்.

“இன்னும் முளைக்கவே இல்லை, அதுக்குள்ளே இவ்வளவு ஆர்ப்பாட்டமா. இதுமாதிரி எத்தனை பந்தா ராணிகளை நாங்க பார்த்திருப்போம்” என்று சிரிக்கிறார்கள் சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.

- லக்கி