ஹர ஹர மஹாதேவகிவாலிப வயோதிக அன்பர்களே!

கதை கால் கிலோ எவ்வளவு என்று கேட்கக்கூடிய அளவிலான கதை.உயிருக்கு உயிராக காதலித்த ஒரு ஜோடி பிரிஞ்சிடலாம்னு முடிவு பண்ணும் போது நடுவுல ஏற்படுகிற சில பிரச்சினைகள்தான் படத்தின் மிக நீளமான கதை. மற்றபடி தமிழ் சினிமாவில் வழக்கமாக வர்ற மாதிரி ஒரு ஹீரோ, அவருக்கு ஒரு மொக்க ஃப்ரெண்டு.

அதே மாதிரி ஒரு அழகான ஹீரோயின், அவருக்கு ஒரு மொக்க ஃப்ரெண்டு. ஒரு காமெடி அரசியல்வாதி, அவருக்கு ஒரு அல்லக்கை. இவர்கள் எல்லோரையும் ஒரு டிராவல் பேக் ஹரஹர மஹாதேவகி ஓட்டலில் ஒன்று சேர்க்கிறது. அதன் பிறகு அங்கு நடக்கும் சம்பவங்கள்தான் மீதிக்கதை.

படம் வெளிவருவதற்கு முன்பே இது வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று பேச்சு இருந்தது. ஆனால் பொதுவாழ்க்கையில் முகம் தெரியாத மக்கள் பேசும் கொச்சை மொழிகளை விட படத்தில் மிகக் குறைந்த அளவுக்கே வரம்பு மீறிய வசனங்கள் இருக்கிறது.

பல ஹீரோக்கள் நடிக்க மறுத்த கதையில் கெளதம் கார்த்திக் அலட்டிக்கொள்ளாமல் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். பேட் இமேஜ் வராதளவுக்கு ஆபாச டயலாக் பேசும் போது கழுவுற மீன்ல நழுவுற மாதிரி எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

பிஸ்கோத் ரோல் என்றாலும் மஸ்கோத் அல்வா போல் அழகால் அள்ளுகிறார் நிக்கி கல்ராணி. வரும் காலங்களில் குஷ்பூ, நமீதா ரேஞ்சுக்கு நிக்கிக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவ்வளவு ஒர்த் லேடி!

வழக்கமாக காமெடி என்ற பெயரில் மொக்கை போடும் சதீஷ் சிரிக்க வைக்கும் வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் கேமரா கோணங்கள் விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஈடுகொடுத்துள்ளன. இசையமைப்பாளர் பாலமுரளி பாலு தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

படம் முழுவதும் வாட்ஸ் அப் சாமியார் குரலில் டயலாக்கை கொடுத்திருப்பது டைரக்டர் டச்!எதற்கு எடுத்தாலும் கையை மட்டுமே நம்பும் வாலிப வயோதிக அன்பர்களை மனதில் வைத்து டபுள் மீனிங் டயலாக்கை மட்டுமே நம்பி படம் எடுத்திருக்கும் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமாரின்  துணிச்சலைப் பாராட்டலாம்.