தாரை தப்பட்டை வில்லனுக்கு கல்யாணம்!ரோலக்ஸ் பாண்டியனாக ‘மருது’ படத்தில் கலக்கியவர் ஆர்.கே.சுரேஷ். ‘தாரை தப்பட்டை’ படத்திலும் வில்லனாக பின்னியெடுத்த இவருக்கு டும் டும் கன்பார்மாகியுள்ளது. சீரியல் நடிகை திவ்யாவை மணக்கிறார்.

ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் மூலம் ‘சாட்டை’, ‘தாரைதப்பட்டை‘, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற ஏராளமான படங்களை வெளியிட்டுள்ள ஆர்.கே.சுரேஷ் தற்போது விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’, உதயநிதியுடன் ஒரு படம், வாசு பாஸ்கர் இயக்கும் ‘பள்ளிப்பருவத்திலே’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அத்துடன் ‘பில்லாபாண்டி’, ‘வேட்டை நாய்’, ‘தனிமுகன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

திருமணத்தைப் பற்றி திவ்யா பேசுகையில், ‘‘இது காதல் திருமணம் அல்ல. இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடக்கிறது. எனது வருங்கால கணவரின் ஊருக்கு அருகில் தான் என்னுடைய ஊரும் இருக்கிறது. இப்போது ‘அடங்காதே’ படத்தில் சரத்குமார் ஜோடியாக நடிக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு டாட்டா காட்டிடுவேன்.’’

- எஸ்