மன்மத வெள்ளம் பாயும் போது...சரோஜாதேவி பதில்கள்

* கணவன், மனைவிக்கு அடங்கிப் போகலாமா?
- எஸ்.கதிரேசன்,
பேரணாம்பட்டு (வேலூர்)அடங்கினால்தான் ஆனந்தம்.

* பத்தினி பற்றவைத்தால் வாழைமரம் எரியுமாமே?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
மூடநம்பிக்கைகளை ஏன் பெண்கள் தலையிலேயே கட்டுகிறார்கள். யோக்கியன் கால் வைத்தால் கடலே வற்றும் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.

* சாமியார்களுக்கு மட்டும் ஏன் அதிக ஆசை?
- வண்ணை கணேசன்,
பொன்னியம்மன்மேடு.
ஆசைக்கு அணைபோட முயற்சிக்கிறார்கள். அளவுக்கதிகமாக மன்மத வெள்ளம் பாயும்போது மதகுகள் தகர்கின்றன.

*பெண் என்பவள் பூந்தோட்டமா, பழத்தோட்டமா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம். பூவாகி, காயாகி, கனிபவள்.

* ‘வயாக்ரா வார்த்தை லேடி’ என்கிற பட்டத்தை உங்களுக்குத் தரலாமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
‘சரோஜாதேவி பதில்கள்’ படித்து ரொம்ப ஸ்டெடி ஆகிவிட்டீர்கள் போலிருக்கே!