நடுப்பக்க ஆழம்!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘வண்ணத்திரை’ புளோ-அப்புகளுக்கு கமெண்டு எழுதுறவருக்கு பூசணிக்காய் சுத்தி திருஷ்டி கழியுங்க சார். சமீராவின் படத்துக்கு எழுதப்பட்ட ‘கார்களிலே நீ sedan’ கமெண்டில் அவ்ளோ கிரியேட்டிவிட்டி.
- ராஜாராமன், மார்த்தாண்டம்.

‘துப்பறிவாளன்’ படத்துக்கான விமர்சனம் நிறை குறைகளை நியாயமாக எடைபோட்டு மிகச் சரியான வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
- மகேஷ், ஸ்ரீவைகுண்டம்.

நடுப்பக்க ஆழத்துலே விழுந்தவன், இன்னும் எழுந்துக்கவே முடியலை.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் தோன்றும் பொன்வண்ணனை என்னவோன்னு நெனைச்சேன். ‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் ‘பேராண்மை’ குறித்து அவர் எழுதியிருந்ததை வாசித்ததும், சிந்தனைத் தளத்தில் அவர் எவ்ளோ பெரிய ஆளுன்னு வியந்தேன்.
- குந்தவை, தஞ்சாவூர்.

திரிஷா வூடு கட்டி அடிக்கிறது இருக்கட்டும். அவரிடம் அடிவாங்கப் போறது என்னைப் போன்ற ரசிகர்களா இல்லாம இருந்தால் சரி.
- மணிவண்ணன், சோழிங்கநல்லூர்.

‘குரங்கு பொம்மை’ டெல்னா, பார்பி பொம்மை மாதிரி அழகாக இருப்பதோடு, உஷாராகவும் பேசுகிறார். பிழைத்துக் கொள்வார்.
- ஜெயசிம்மன், பெங்களூர்.

‘பர்ர்ர்ர்ர்ர்’ வெண்ணிற ஆடை மூர்த்தியின் ரீ-என்ட்ரி மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிக்கத்தக்க அவரது டபுள் மீனிங் டயலாக்குகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
- தமிழ்ச்செல்வன், கோயமுத்தூர்.