சர்ச்சைக்குள்ளாகும் லிப்லாக்!ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளரும், பழம்பெரும் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவின் மகளுமான பி.ஆர்.விஜயலட்சுமி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அபியும் அனுவும்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் உதட்டோடு உதடு லிப்லாக் காட்சியின் படம் இணையதளங்களில் வைரல் ஹிட் ஆகியிருக்கிறது.

பெண் இயக்குநர் ஒருவர் இயக்கும் படத்திலேயே இதுபோன்ற காட்சி இடம்பெறலாமா என்று நெட்டிஸன்கள் அறச்சீற்றத்தோடு அலறிக் கொண்டிருக்கிறார்கள்.“என் படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் அக்காட்சியை எடுத்தேன். விமர்சிப்பவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்கட்டும்” என்று சூடாக பதிலடி கொடுத்திருக்கிறார் விஜயலட்சுமி.

- யுகி