மன்மதக் குளத்தில் மாதுளை மொட்டு!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

பொன்விழா காணும் மயிலுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கும் வகையில் அவரது சிறப்புப் பேட்டியை வெளியிட்ட ‘வண்ணத்திரை’க்கு நன்றி.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

அண்ணனின் பெயர் கெடாதபடி நல்ல இசையமைப்பாளராக வலம் வரத் துடிக்கும் இசைப்புயலின் தங்கை இஷ்ரத் காதரியின் கனவு (இன்ஷா அல்லாஹ்) விரைவில் நிறைவேறும்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

நடுப்பக்க மன்மத குளத்தில் மாதுளை மொட்டு.....  வயசுப்பசியிலே வாடிக்கிடக்குற மனசுக்கு இவள்தான் லட்டு. சூட்டைக் கிளப்புற படங்கள் போடுவதில் ‘வண்ணத்திரை’ எப்பவுமே சூப்பர்ஹிட்டு.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

வெயிலை நம்ம ஜில்பான்சுங்க எப்படி சமாளிச்சாங்கன்னு கேட்டுப் போட்டிருப்பது செம தூள் & கூல்
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘தல’க்கு மட்டுமின்றி தளபதிக்கும் காஜல் சர்ட்டிஃபிகேட் கொடுத்திருந்தார். ஆனால், நீங்கள் தல படத்தை மட்டும் போட்டிருப்பது ஒருதலைப் பட்சமானது. வன்மையான கண்டனங்கள்.
- லலித் சர்மா, போரூர்.

‘டைட்டில்ஸ் டாக்’ பகுதி அருமையாக வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த வாரம் டெல்லி கணேஷ் இணைய தளம் பற்றி எழுதியிருந்தது சுவாரஸ்யமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
- குந்தவை, தஞ்சாவூர்.

‘வண்ணத்திரை’யின் நடுப்பக்கத்தை வார்னீஷில் பளபளவென போடக்கூடாதா? நீண்டகால வாசகனின் கோரிக்கை இது.
- முரளி, மேடவாக்கம்.