கல்கத்தா ராணி!



ஆடி ஸ்பெஷல் அயிட்டம்

பெயர் : மரியம் ஜகாரியா
ஹிட் அயிட்டம் : ‘அஞ்சான்’ படத்தில் ‘bang bang’

ஸ்வீடன் + ஈரானிய காக்டெயில். மாடலிங்கில் மங்காத்தா. மரியாவை தமிழுக்கு கொண்டு வந்தவர் சுந்தர்.சி. அவரது ‘நகரம்’ படத்தில் ‘எம் பேரு கிருஷ்ணவேணி.... நான் கல்கத்தா ராணி’ என்று குத்தாட்டம் போட வைத்தார். ‘‘பிறந்தது ஸ்வீடன். மாடலிங் டு டான்ஸர். ஸ்வீடனில் உள்ள பாலிவுட் டான்ஸ் ஸ்கூலில் டான்ஸ் டீச்சராக ஒர்க் பண்ணியிருக்கேன்.

அங்கிருந்து பாலிவுட் என்ட்ரி. தெலுங்கில் என்னோட ஹாட் அயிட்டம் டான்ஸை பார்த்துட்டுதான் ‘நகரம்’ல கமிட் பண்ணாங்க. ‘அஞ்சான்’ படத்தில் ‘bang bang’ பாடல் பார்த்துட்டு எல்லாரும் வெரி ஹாட் & செக்ஸ் அப்பியரன்ஸ்னு பாராட்டினாங்க. நான் இன்னும் தமிழ் கத்துக்கல. இங்கே ஹீரோயினா கமிட் ஆனா, கண்டிப்பா தமிழ் கத்துக்குவேன்’’ என உதடு கடித்து கொஞ்சுகிறார்.