Beach babe!



ஆடி ஸ்பெஷல் அயிட்டம்

பெயர் : நோரா ஃபதேஹி
ஹிட் அயிட்டம் : ‘பாகுபலி’ மனோகரி

தெலுங்கு தேசத்தின் ஹாட் அயிட்டம் ஸ்டார் டான்ஸராக உருவெடுத்திருக்கிறார் நோரா. ‘தோழா’வின் ‘டோரு நம்பரு’ பாடலில் வசீகரித்தவர், ‘பாகுபலி’யில் ‘மனோகரி’ பாட்டில் பிரபாஸுடன் கொஞ்சிய பெண்களில் ஒருவர்.‘‘ஆக்‌ஷுவலி, நான் மொராக்கன் கனடியன் டான்ஸர். மாடலிங்ல இருந்து ‘ரோர்’ படத்தின் மூலம் பாலிவுட் என்ட்ரி.

அங்கிருந்து தெலுங்கில் ‘டெம்பர்’ படத்திலிருந்து ஸ்பெஷல் அப்பியரன்ஸ் டான்ஸ் ஆட ஆரம்பிச்சேன். இந்தியில் சல்மான்கான் நடத்தின ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நானும் கன்டஸ்டன்டாக பங்கேற்றது மறக்க முடியாத இன்ஸிடென்ட். நான் ஒரு beach-babe. பிகினி காஸ்ட்யூம்ஸ் ஃபேவரிட்.

என்னோட உடம்பில் எனக்கு ரொம்ப பிடிச்சது என்னோட இடுப்புதான்’’ எனச் சொல்லும் நோரா, பெல்லி டான்ஸில் ரொம்பவே ஸ்பெஷலிஸ்ட்.... ‘மனோகரி’ பாடலில் நோராவுடன் ஆடிய மீதமிருவர் ஸ்கார்லட் வில்சன், சினேகா உபாதே என்பது கூடுதல் தகவல்.