நடுப்பக்கம் அமோகம்!
ரீடர்ஸ் கிளாப்ஸ்!
நிக்கிகல்ராணி போன்ற ஹைப்ரொஃபைல் அழகிகளுக்கு ‘பப்பரப்பா மேனி பருவம் ஊற்றெடுக்கும் கேணி’ மாதிரி கமெண்டு போட்டு எங்களை இளமையால் வறுத்தெடுப்பது ‘வண்ணத்திரை’யின் பாணி. - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
நடுப்பக்க கவர்ச்சி மையமாய் விருஷாலி. வாராவாரம் நெஞ்சு படபடக்க இப்பக்கத்துக்கு நாங்கள் விருந்தாளி. - கவிஞர் கவிக்குமரன், பெரவள்ளூர்.
சிங்காரச் சென்னை கண்டெடுத்த சக்கரைக்கட்டி சோனா ஹெய்டன் குறித்த இந்த வார ‘ஹீரோயினிஸம்’ பகுதி வெகுசிறப்பு. - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
சசிகலா பற்றிய பல இரகசியங்கள் தனக்குத் தெரியும் என்று மார்தட்டிக் கொள்ளும் இயக்குநர் ராம்கோபால்வர்மா, அவரைப்பற்றி படமெடுப்பதைவிட தனக்குத் தெரிந்த இரகசியங்களை நீதிமன்றத்தில் தானாகவே முன்வந்து சொல்வதே நாட்டுக்கு நலம் பயக்கும். - கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.
அதிரிபுதிரி கவர்ச்சிப் படங்களும், அவற்றுக்கு அராஜகமாக கொடுக்கப்படும் கமெண்டுகளும்தான் ‘வண்ணத்திரை’யின் மணிமகுடம் - பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.
‘சரோஜாதேவி பதில்கள்’ பகுதியில் இளமைக் குறும்பு ஆர்ட்டீசியன் ஊற்றாகக் கொப்பளிக்கிறது. இவற்றைத் தொகுத்து ஒரு முழுநூலாகக் கொண்டுவந்தால் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே? - கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக சபீஜே தமிழுக்கு நடிக்க வந்திருப்பது வரவேற்கத்தக்கது. பெண்ணியம் பேசுவது என்பது ஏற்கும் கதாபாத்திரத்தின் வசனமல்ல, நிஜத்திலும் பேசுவதைப் போலவே வாழ்ந்து காட்டுவது என்பதை அவர் நிரூபிப்பார் என்று நம்புவோம். - ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.
|