அம்மாவாக பிரமோட் ஆகிறார் தயாரிப்பாளர்!



அகத்தியனின் இளைய மகள் விஜயலட்சுமி, ‘சென்னை 600028’ படத்தில் அறிமுகமாகி பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று சினிமா உதவி இயக்குநரான பெரோஸ்கானைக் காதலித்து மணந்தார்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பைத் தவிர்த்து வரும் (‘சென்னை 600028’ இரண்டாம் பாகம் மட்டும் நண்பர்களுக்காக நடித்தார்) விஜயலட்சுமி, தன்னுடைய காதல் கணவரை இயக்குநராக்கி தயாரிப்பாளர் ஆகிவிட்டார்.

விரைவில் விஜயலட்சுமி தயாரித்த ‘பண்டிகை’ வெளிவர இருக்கிறது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, வேறொரு ரிலீஸை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பெரோஸ்கான் - விஜயலட்சுமி தம்பதியினர். யெஸ், விஜி அம்மா ஆகப்போகி றாராம். ‘வண்ணத்திரை’ வாசகர்கள் சார்பாக வாழ்த்துகள்.

- தேவ்