தணலானது உடல்



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘ஹீரோயினிஸம்’ பகுதியில் நடிகை எமி ஜாக்சன் பற்றிய கட்டுரை, அவரை முழுமையாக அறிந்துகொள்ள உதவியது. அவருடைய இந்தியப் பண்பு மெய்சிலிர்க்க வைத்தது.
- ப.முரளி, சேலம்.

ஒவ்வொரு புளோஅப்புக்கும் நீங்கள் தரும் கமெண்ட்ஸ் சும்மா அள்ளுது. உடம்பு தணலாய் கொதிக்கிறது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ரஜினி பாணியில் ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்று சொல்லும் சின்னி ஜெயந்தின் ரீ-என்ட்ரியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பிறமொழி நாயகிகளின் திறமையை உணர்ந்து அவர்களை தக்கவைத்துக் கொள்வதில் தமிழ்சினிமா என்றுமே நம்பர் ஒன். எமிஜாக்சனும் அதற்கு விதிவிலக்கல்ல.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

நற்றமிழ் கவிநாயகன் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு நினைவு மலர்களை மாலையாக்கி அஞ்சலி செலுத்திய கவிஞர் நெல்லைபாரதி, கவிஞர் யுகபாரதி ஆகியோரின் கட்டுரைகள் கண்ணீர் விட வைத்தன.
- கவிக்குமரன், பெரவள்ளூர்.

நா.முத்துக்குமாரா, உன் கவிதை வரிகள் காலனுக்கும் பிடித்துப் போனதால்தான் இத்தனை சீக்கிரம் உன்னை அழைத்துக் கொண்டானா? உன் கவிதைகள் எம் உயிர் இருக்கும் வரை என்றென்றும் எங்கள் மனங்களில் அலையடித்துக் கொண்டிருக்கும். சொர்க்கத்தில் சந்திப்போம் நண்பா. குட் பை!
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘தர்மதுரை’யின் தரத்தை உணர்ந்து மிக சரியாக எடைபோட்டது ‘வண்ணத்திரை’. ஆனால், தன் படங்களுக்கு கவித்துவமாக பெயர் சூட்டும் சீனுராமசாமி, இந்தப் படத்துக்கு மட்டும் கமர்ஷியல்தனமாக பெயர் சூட்டியதுதான் திருஷ்டி பரிகாரம்.
- பொ.சின்னராஜா, குற்றாலம்.