நான் விரும்பினாதான் காட்டுவேன்!



‘கவர்ச்சி’ குறித்து இஷா அதிரடி

நிவின்பாலி, இஷா தல்வார் நடிப்பில் ரிலீஸான ‘தட்டத்தின் மறையத்து’வை தமிழில் ‘மீண்டும் ஒரு காதல்கதை’ ஆக்கி மீண்டும் ஒரு வெற்றியை எட்டியிருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர். வால்டர் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் இப்படத்தில், மலையாளத்தில் நடித்த இஷா தல்வாரே ஹீரோயினாக நடித்திருக்கிறார். இஷாவை வாட்ஸப்பில் பிடித்தோம்.

“பயங்கர பிஸியா? தமிழில் பார்த்து ரொம்ப நாள் ஆகுதே?”
“ஆங்கிலம், மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்குன்னு அஞ்சு மொழிகளில் நடிக்கிறேன். தமிழில் ‘தில்லுமுல்லு’ மட்டும் செஞ்சேன்.

அதுக்கப்புறம் இங்கே சரியான வாய்ப்பு அமையலை. இப்போ நிறைய விளம்பரப் படங்களிலும் நடிக்கிறதாலே, கிடைக்கிற வாய்ப்பு எல்லாத் தையும் ஒத்துக்கறதில்லை.”“நீங்க ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தில் போர்த்திக்கிட்டு நடிச்சிருக்கீங்க. ஆனா, மத்த படங்களில் ரொம்ப எக்ஸ்போஸ் பண்ணி காட்டுற மாதிரி இருக்கே?”

“எவ்வளவு கிளாமர் காட்டணும் என்பதை கதையும், காட்சியும்தான் முடிவெடுக்கும். இந்தப் படத்துக்கு கிளாமர் தேவைப்படலை. தேவைப்படுற படத்துக்கு காட்டிதான் ஆகணும். அதனாலேதான் எப்பவும் உடற்பயிற்சியெல்லாம் செய்து உடம்பை சிக்குன்னு வெச்சிருக்கேன். ஆனா, கிளாமர் என்பது நாகரிகமா வெளிப்படணும்னு விரும்பறேன். ஒரு நடிகையை பலவந்தப்படுத்தி கவர்ச்சி கண்காட்சி ஆக்கிடக் கூடாது.”“அப்படின்னா, நீங்க கவர்ச்சியா நடிக்கணும்னு யாராவது வலியுறுத்தினாங்களா?”

“நோ.. நோ.. அப்படியில்லை. இதுவரை என்னை யாரும் அப்படியெல்லாம் கட்டாயப்படுத்தியது இல்லை. நான் பொதுவா சொல்றேன்.”“அப்பப்போ தமிழ்ப் படங்களில் தலை காட்டுங்களேன். உங்க ரசிகர்கள் பாவமில்லையா?”

“எனக்கும் தமிழில் நிறைய படம் பண்ணணும்னு ஆசைதான். நல்ல கேரக்டர் அமைஞ்சா நிச்சயம் செய்வேன்.”“உங்களைப் பத்தி என்னன்னு கிசுகிசு எழுதறது?”“இதுவரை கிசுகிசுக்களில் சிக்காத நடிகை இஷா தல்வார்னு ஒரு கிசுகிசு எழுதுங்க பாஸூ.”

- தேவராஜ்