அஜால் குஜால் கதையில் ஐஸ்வர்யாராய்!



அக்‌ஷய்குமார் நடித்த பீரியட் ஃபிலிமான ‘ருஸ்தம்’, நூறு கோடி ரூபாய் வசூலைத் தாண்டியிருக்கிறது. அக்‌ஷயைவிட இப்படத்தின் ஹீரோயின் இலியானாதான் இதனால் ஏகத்துக்கும் குஷியாகியிருக்கிறார்.

பாலிவுட்டில் பெரிய ரவுண்டு அடிக்க அவருக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
தேசிய விருது பெற்ற கங்கனா ரணாவத்துக்கு ஏகத்துக்கும் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகிறது. காஸ்ட்யூம் சென்ஸ் மிக்க நடிகையான இவரேதான் விளம்பரப் படங்களுக்கும் தனக்கான ஆடைகளை தேர்வு செய்கிறார்.

‘ரயீஸ்’ படத்தின் ரஷ் போட்டுப் பார்த்த ஷாருக்குக்கு அவ்வளவாக திருப்தியில்லையாம். சமீபமாக பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் அவதிப்படும் அவர், இந்தப் படத்தைத்தான் பெரிய அளவில் நம்பியிருக்கிறார். எனவே, பல காட்சிகளை மீண்டும் படம் பிடிக்கச் சொல்லிவிட்டார். இதனால் படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போகிறது.

‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தின் கரு அஜால் குஜாலான கள்ளக்காதல் கதையாம். இதில் ஐஸ்வர்யாராய், கிளுகிளுப்பான காட்சிகளில் வூடு புகுந்து அடித்திருப்பதைக் கண்டு அமிதாப் குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்துபோய் இருக்கிறதுஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி குறித்த வாழ்க்கை திரைப்படம் ஏகத்துக்கும் சர்ச்சைகளைக் கிளப்பும் என்கிறார்கள். இதில் சச்சின் டெண்டுல்கர், கங்கூலி, ராகுல் டிராவிட் போன்ற சீனியர் கிரிக்கெட் வீரர்களின் அரசியலும் காட்சிகளாக்கப்பட்டு இருக்கிறதாம்.

‘ஆங்கே-2’ படத்தில் இலியானா நடிப்பதாக தயாரிப்பாளர் சொல்லி வருகிறார். தான் ஒப்புக்கொள்ளாத படத்தில் தான் இருப்பதாக விளம்பரப்படுத்துவது மோசடியென தயாரிப்பாளர் மீது இலியானா வழக்கு தொடுக்க இருக்கிறார்.

அக்‌ஷய்குமாரின் அடுத்த படத்துக்கு ‘டாய்லெட்’ என்று விசித்திரமாக பெயர் சூட்டியிருக்கிறார்கள். தமிழில் கழிவறைப் பிரச்சினையை முன்வைத்து வெளிவந்து வெற்றி பெற்ற ‘ஜோக்கர்’ திரைப்படத்துக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள்.

ரன்பீருடன் காதல் புட்டுக் கொண்டதால் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூருடன் நெருங்கிப் பழகி வருகிறார் கேத்ரினா கைஃப். இதனால் சித்தார்த்தின் மனைவியான வித்யாபாலன் கேத்ரினா மீது செம காண்டில் இருக்கிறார்.

தொழிலதிபர் ராஜ்குந்தராவுடனான மணவாழ்வு முடிந்துவிட்டதாக வரும் தகவல்கள் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று சீறுகிறார் ஷில்பா ஷெட்டி.திருமணத்துக்குப் பிறகு அக்கா, அண்ணி வேடங்களுக்கே தன்னைக் கூப்பிடுகிறார்கள் என்று சலித்துக்கொண்டிருந்த பூமிகா, ‘டோனி’ திரைப்படத்தில் அக்கா வேடத்தில் நடிக்கிறார்.

- ஜியா