ககக போசென்னையில் நண்பனின் அறையில் தங்கி வேலை தேடுகிறார் ஹீரோ கேசவன். வேலை இவருக்கு தண்ணி காட்டுகிறது. ஏனெனில் கேசவனின் ராசி அப்படி. ஆனால், நாயகி சாக்‌ஷி அகர்வாலுக்கு தொட்டதெல்லாம் பொன்னு. அப்படியொரு ராசியான பொண்ணு. இந்த அன்லக்கி பாயும், லக்கி கேர்ளும் சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ராசி இடமாறுகிறது. கேசவன் லக்கியாகிறார். சாக்‌ஷி அன்லக்கி ஆகிறார்.

இருவரும் என்னதான் ஆகிறார்கள் என்று படத்தின் மீதிக் கதை சொல்லுகிறது.அப்பாவி இளைஞன் வேடத்துக்கு பக்காவாக பொருந்துகிறார் கேசவன். துரதிருஷ்டவசமாக தியேட்டரில் இவரது நடிப்புக்கு கிடைக்கும் கைதட்டல்களைக் கேட்க, அவர் இப்போது உயிரோடு இல்லை என்பதுதான் கொடுமை. சாக்‌ஷியின் இளமையும், திறமையும் அவருக்கு கைகொடுத்திருக்கிறது.

பஞ்சுசுப்புவின் நடிப்பும், கெட்டப்பும் குட். ஆதவன், எம்.எஸ்.பாஸ்கர், பவர்ஸ்டார், ரோபோ சங்கர், மயில்சாமி என்று தெரிந்த முகங்கள் நிறைய.திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்த இக்பாலின் ஒளிப்பதிவு உதவுகிறது. மூடநம்பிக்கைதான் கதையின் மூலதனம் என்றாலும், ஜாலியாக பார்க்கும் விதத்தில் படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.