அனுஷ்கா தூது!‘மேரா பாரத் மஹான்’ மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலக மறுபிரவேசம் செய்ய இருக்கிறார் ஷில்பா ஷெட்டி.கணவரைப் பிரிந்துவிட்ட நந்திதா தாஸ், விடுமுறை கொண்டாட தனது ஏழு வயது மகனுடன் லண்டனுக்கு சென்றுள்ளார். ‘கத்தி’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமாருடன் நடிக்க ஏ.ஆர்.முருகதாசுக்கு அனுஷ்கா சர்மா தூது விட்டுள்ளாராம்.

பிரியங்கா சோப்ராவின் ‘பேவாட்ச்’ ஹாலிவுட் படத்தை இந்தியாவில் பெரியளவில் திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன.மகேஷ்பாபுவைப் போலவே தானும் ஒரு கிராமத்தை தத்தெடுக்கும் ஆசை உள்ளது என்கிறார் தீபிகா படுகோனே.

- ஜியா