ஒண்ணுக்கு பத்து முத்தம்!



தமிழ் சினிமாவுக்கு ‘லொள்ளு சபா’ கொடுத்த கொடைகள் ஏராளம். அந்நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த முதல் ஹீரோ சந்தானம், ‘தில்லுக்கு துட்டு’ என்று செம கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் என்றால், அடுத்த ஹீரோ ஜீவா, ‘ஆரம்பமே அட்டகாசம்’ என்று அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார். ரங்கா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஆரம்பமே அட்டகாசம்’ படத்தில் ஹீரோயின் சங்கீதாவுக்கு அவர் கொடுத்த லிப் டூ லிப் கிஸ், சோஷியல் நெட்வொர்க் சைட்டுகளில் ஹாட் ஹிட். இப்ராஹிம் இயக்கத்தில் ‘கொம்பு’ சுற்ற ரெடி ஆகியிருக்கும் ஜீவாவை சந்தித்தோம்.

“காமெடியன்கள் வரிசையா ஹீரோவா அவதாரம் கட்டுறீங்களே?”
“நானும் சரி, சந்தானமும் சரி, ஹீரோவா நடிக்கதான் இங்கே வந்தோம். அதுக்கு முன்னாடி காமெடியில் க்ளிக் ஆயிட்டோம். கிடைச்சதை வெச்சி முன்னாடி சந்தோஷப்பட்டோம். இப்போ எங்களுக்கான காலம் வந்திருக்கு. எதை ஆசைப்பட்டோமோ அதை அடைஞ்சிருக்கோம்.”
“ஆனா, காமெடி ஹீரோவாதான் பண்ணுறீங்க இல்லையா?”

“ஆமாம். ஆனா, ரொம்ப நாள் காமெடியே பண்ணிக்கிட்டிருக்க மாட்டோம். நாங்க ஹீரோதான்னு ரசிகர்கள் மனசுலே நல்லா பதிஞ்சதுக்கு அப்புறம் ரெகுலர் ஹீரோவா மாறி ரொமான்ஸ், ஆக்‌ஷன்னு பட்டையைக் கிளப்புவோம்.”“ஹீரோவாகி முதல் படமே ‘ஆரம்பமே அட்டகாசம்’னு அட்டகாசமா டைட்டில் பிடிச்சிட்டீங்க...”
“இந்தப் படத்தோட டைரக்டர் ரங்கா, தீவிரமான அஜீத் ரசிகர்.

அதனாலேதான் தலயோட சூப்பர்ஹிட் படங்களான ‘ஆரம்பம்’, ‘அட்டகாசம்’ ரெண்டையும் அவரோட படத்துக்கு டைட்டிலா யூஸ் பண்ணிக்கிட்டாரு. இந்தக்கால காதலர்கள், காதலை எப்படி பார்க்குறாங்க. காதல் தோல்வியை எப்படி எதிர்கொள்ளுறாங்கன்னு இந்தப் படத்தோட கதை ஒரு விவாதத்தை முன்வைக்குது. அதுக்குன்னு இது சீரியஸ் படம்னு நினைச்சிடாதீங்க. ‘சிவா மனசுலே சக்தி’ மாதிரி அதிரிபுதிரியா இருக்கும். பர்ஸ்ட் சீனில் இருந்து கிளைமேக்ஸ் வரைக்கும் சிரிப்பு வெடிக்கு நான் கேரண்டி.

ரங்காவோட ஏற்கனவே நான் ஒர்க் பண்ணியிருக்கேன். இந்தக் கதையை அவர் எழுதறப்பவே நான்தான் ஹீரோ ரோலுக்கு பொருத்தமா இருப்பேன்னு அவருக்கு தோணியிருக்கு. பாண்டியராஜன், சாம்ஸ், வையாபுரி, ஸ்ரீநாத், வாசுவிக்ரம், ஞானசம்பந்தம், முனீஸ், நெல்லைசிவா, தேனடை மதுமிதான்னு காமெடி நட்சத்திரப் பட்டாளத்தோடு எங்க லொள்ளு சபாவோட மனோகர், சேஷு, உதய்னு செம ஜமாவா களமிறங்கியிருக்கோம். படம் முடிஞ்சி ரிலீசுக்கு ரெடியா இருக்கு. பர்ஸ்ட்லுக் போஸ்டரை விரைவில் வெளியிடப் போறோம்.”

“சரி, அந்த லிப் டூ லிப் கிஸ் பற்றி...?”
“கரெக்ட்டா ‘வண்ணத்திரை’யோட டிரேட்மார்க் கொஸ்டினுக்கு வந்துட்டீங்க. ஆக்சுவலா படத்துலே ஒரே ஒரு கிஸ் சீன் தான் வரும். ஆனா, அந்த ஒரு காட்சியை எடுக்கவே பத்து டேக் ஆயிடிச்சி. ஹீரோயின் சங்கீதாபட்தான் எனக்கு முத்தம் கொடுக்குற மாதிரி சீன்.

 பப்ளிக்கா இந்த மாதிரி சீன் எடுக்குறப்போ, அதுலே நடிக்குறவங்களுக்கு அபுக்குன்னு இருக்கும். ஆனா, சங்கீதா எந்த டென்ஷனும் இல்லாமே ஒண்ணுக்கு பத்துவாட்டி சிறப்பா உறிஞ்சி தள்ளிட்டாங்க. எனக்குதான் உதடு கொஞ்சம் டேமேஜ் ஆயிடிச்சி. கமல் சார் எப்படிதான் இத்தனை வருஷமா இந்தப் பிரச்சினையை சமாளிச்சி முத்த மன்னனா உருவெடுத்திருக்காரோ தெரியலை.”“அடுத்து?”

“இப்ராஹிம் இயக்கத்தில் ‘கொம்பு’ செய்யுறேன். ரொமான்ஸ் கலந்த ஹாரர் மூவி. எனக்கு ஜோடியா ‘தமிழ்ப்படம்’ ஹீரோயின் திஷா பாண்டே நடிக்கிறாங்க. இதுதவிர ‘மெர்லின்’, ‘பயமா இருக்கு’ படங்களில் கேரக்டர் ரோல் பண்ணியிருக்கேன்.”
“ஹீரோ ரோல், கேரக்டர், காமெடின்னு மாத்தி மாத்தி செய்யுறது சரிதானா?”  
   
“பாக்யராஜ், பாண்டியராஜன் ரூட்டுலே டிராவல் பண்ணணுங்கிறதுதான் என்னோட ஆசை. கதை, காமெடி ரெண்டுமே சினிமாவுக்கு முக்கியம். எனக்கு காமெடி பண்ணத் தெரியுங்கிறதாலே காமெடிக்கு முக்கியத்துவம் இருக்குற கதைகளில் நடிக்கிறேன். ஃபைட் பண்ணுறது, ரொமான்ஸ் செய்யுறதெல்லாம் கூடுதலா கிடைக்கிற சலுகைகள்தான்.

சந்தானம், சூரி அளவுக்கெல்லாம் நான் அவ்வளவா காமெடி டிராக் பண்ணதில்லை. ஃப்ராங்கா ஒத்துக்கறேனே. நான் அந்த ஏரியாவில் சரியா போணியாகலை. அதே நேரம் ரிலீஸ் ஆகுற படம் எல்லாத்துலேயும் தலை காட்டணும்னும் நான் எப்பவும் நெனைச்சதில்லை. திரையில் காமெடியனா என்னை நிறைய படங்களில் பார்த்திருந்தா, இப்போ ஹீரோவா வர்றப்போ அந்த இமேஜே டிஸ்டர்ப் பண்ணும்.

நான் நிறைய படம் பண்ணாதது ஒருவகையில் நல்லதுதான். நேஷனல் அவார்டோ, ஆஸ்கர் அவார்டோ வாங்குற லட்சியமெல்லாம் எதுவும் இல்லைங்கிறதாலே, கிடைச்ச வாய்ப்புகளை சரியா செய்யணுங்கிற நோக்கம் மட்டும்தான் எனக்கு இப்போதைக்கு இருக்கு.”

- சுரேஷ்ராஜா