அஜீத்துடன் அனுஷ்கா நடிக்காதது ஏன்?AK56 exclusive!

அஜீத் நடிக்கும் அடுத்த படத்தில் அனுஷ்காதான் ஹீரோயின் என்று உறுதியாக சொல்லப்பட்டது. ஏற்கனவே ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவருடன் இரு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தாலும், சிங்கிள் ஹீரோயினாக தலயோடு டூயட் பாட ஆவலாக இருந்தார்.

ஆனால், ‘பாகுபலி-2’, ‘சிங்கம்-3’, ‘பாகுமதி’, ‘ஓம் நமோ வெங்கடேசா’ என்று அனுஷ்காவின் கால்ஷீட் டயரி ஃபுல். அஜீத் படத்துக்காக இயக்குநர் சிவா கேட்ட தேதிகளை அவரால் ஒதுக்கித்தர முடியவில்லை.

அனுஷ்கா இல்லையென்று முடிவானதுமே அஜீத்தின் ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ ரித்திகாசிங்கின் பெயர் அடிபட்டது. இப்போது அவரும் இல்லையாம். காஜல் அகர்வால் நடிக்கிறார் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல். அடுத்த மாதம் பல்கேரியாவில் ஷூட்டிங் தொடங்குகிறது. முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படப்பிடிப்பு நடக்கிறதாம்.

- தேவராஜ்