சோனாக்ஷிக்கு செம லைக்!
‘ஃபுட்டு’ படத்தில் கேத்ரினா கைப், சன்னி லியோன் இருவரும் கெஸ்ட் ரோல்களில் நடிக்க உள்ளனர். ஆனால், விளம்பரத்தில் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் தரவேண்டும், சன்னி லியோன் படத்தை போடக்கூடாது என கண்டிஷன் போட்டுள்ளாராம் கேத்ரினா.கரீனா கபூர் டிசம்பரில் தாயாகப் போகிறார். மீடியாவாக கண்டுபிடித்து கிசுகிசு மாதிரி எழுதுவதை தவிர்ப்பதற்காக, இதை அறிக்கையாகவே வெளியிட்டு விட்டார் அவரது கணவர் சைப் அலிகான்.
 ‘மௌனகுரு’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘அகிரா’வின் டிரெய்லர் ரசிகர்களின் லைக்குகளை குவித்துள்ளது. இதில் ஹீரோ வேடத்தை மாற்றி ஹீரோயின் வேடமாக்கியுள்ளனர். சோனாக்ஷி சின்ஹாதான் ஹீரோயின். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.
தொடர்ச்சியாகவே பாலிவுட் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பப்படமாகி வருவதால் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் திடீர் மீட்டிங் போட்டு ஆலோசனை நடத்தியுள்ளனர். அனேகமாக ஹீரோக்களின் சம்பளத்தில் கைவைப்பார்கள் போலிருக்கிறது.அஜய் தேவ்கன் நடித்து இயக்கும் ‘ஷிவே’ படத்தின் ஆக்ஷன் காட்சிகளையும் அவரே வடிவமைத்துள்ளார்.
- ஜியா
|