வனப்பு குறையுதே?
ரீடர்ஸ் கிளாப்ஸ்!
 பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன், தன்னுடைய பேத்தி வயது நடிகைகளோடு ஜோடி போட நினைப்பது நியாயமா? - கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.
காசு, பணம், துட்டு, money... இவை இருந்தால் போதும். அனுஷ்கா, நயன்தாரா என்ன, ஹாலிவுட் அழகிகளுடனேயே கூட பவர்ஸ்டார் ஜோடியாக நடிக்கலாம். - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
நடுப்பக்கத்தில் மழை பொழிந்து மலை செழித்த வளத்தை கண்டு வாசகமனங்கள் மகிழ்ச்சிக்கடலில் நீச்சலடிக்க ஆரம்பித்து விட்டோம் - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
சன்னிலியோனின் வியக்க வைக்கும் நெஞ்சுரத்தை கண்டு ஆடிப்போய்விட்டோம். ஸ்டில்லை கலரில் போட்டிருக்கக் கூடாதா? கருப்பு வெள்ளையில் வனப்பு குறையுதே? - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
அந்தக்கால ரசிகர்களின் கனவுக்கன்னியான ராஜசுலோச்சனாவின் திரை ஓய்வுக்குப் பின்னான சமூகநலப் பணிகளை சிறப்பாக படம் பிடித்துக் காட்டியது ‘ஹீரோயினிஸம்’ பகுதி. - ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.
‘கட்டபொம்மன்’ படத்தில் ‘ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா’ பாடல் மூலம் எங்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட வினிதாவின் இன்றைய தோற்றத்தை ‘அன்று இன்று’ பகுதியில் பார்த்ததுமே ஹார்ட் அட்டாக் வராததுதான் மிச்சம். - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
சரோஜாதேவியின் பஞ்சுமிட்டாய் பதிலுக்கு உங்கள் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் போட்டிருந்த பஞ்சுவண்ண படம் பட்டாசு. - குந்தவை, தஞ்சாவூர்.
|