சொந்த காசில் சூன்யம்




Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
       
 ம்பள பாக்கி கேட்ட நாயகன் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார் சரோஜா. ‘‘கடைத்தெரு படமெடுத்த இயக்குநர் தற்போது வரலாற்றுப் படமொன்றை இயக்கிக் கொண்டி ருக்கிறார் அல்லவா?

அந்தப் படத்தின் குரல் பதிவு வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக் கிறதாம். அந்தப் படத்தின் நாயகன் குரல் பதிவுக்கு வர ஒருநாள் தாமதமானதாம். உடனே அவருக்குத் தொலைபேசி செய்த தயாரிப்பாளர், ‘ஏன் தாமதம்? சரியாக வந்து முடித்துக் கொடுக்க மாட்டீர்களா?’ என்று குரல் உயர்த்திப் பேசினாராம். கடுப்பான நாயகன், ‘‘ஏற்கெனவே பேசியபடி சம்பளத்தைத் தரவில்லை, இருந்தாலும் பரவாயில்லை என்று வந்து டப்பிங் பேசிக்கொடுத்தால் ஒருநாள் தாமதமானதற்குச் சத்தம் போடுகிறீர்களா? என் சம்பளபாக்கியை செட்டில் செய்யுங்கள்.

அதன்பின் வந்து டப்பிங் பேசிக் கொடுக்கிறேன்’ என்றாராம். இதனால் அந்தத் தயாரிப்பாளர் பணத்துக்கு அலைந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்’’ என்றார் சரோஜா.