“நல்ல படமெடுப்பவர்கள் வெகுவாகக் குறைந்து விட்டார்கள் என்று ஒரு பக்கம் புலம்பல்கள் கேட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல படமெடுத்த இயக்குநர்களுக்கு அடுத்தபடம் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது தெரியுமா?” என்றார் சரோஜா.
“யாரைச் சொல்லுகிறீர்?” என்று நாம் கேட்டதும், “தென் பருவப் படமெடுத்துத் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற இயக்குநருக்குத் தான் அடுத்த படம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறதாம்.அவரை வைத்துப் படமெடுக்க மூன்றெழுத்துப் பெரிய நிறுவனத்தின் ஒரு பிரிவினர் கூப்பிட்டார்களாம்.அங்கு போனால், கதை பற்றி யெல்லாம் முதலில் பேசாமல், ‘குறைந்த பட்ஜெட்டில் பட மெடுக்க என்னால் முடியும் என்று பேட்டிகள் கொடுத்தீர்கள். அது மாதிரியே எங்களுக்கு இந்த பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்துக்கொடுக்க முடியுமா?’ என்று மிகக்குறைந்த பட்ஜெட்டைச் சொன்னார்களாம்.
அதைக் கேட்ட இயக்குநர் அதிர்ந்து போய்விட்டாராம். ஒவ்வொரு படத்தையும் கஷ்டப்பட்டே எடுக்கவேண்டுமா? என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் அந்த இயக்குநர்” என்றார் சரோஜா.