ரசிகர்களை தங்களுடைய நடிப்பால் குஷிப்படுத்தும் நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் சந்தோஷம் கிடையாது என்பதை ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தில் விளக்கப் போகிறதை வரவேற்கிறோம்.
ம.சுந்தரி, தேனி.
‘பிரேமகதா’ இந்திப் படத்துல நம்ம ஊர் சிம்பு கௌரவ வேடத்தில் நடிக்கப் போவதாகப் படித்தேன். அங்கேயும் விரல் வித்தை காட்டாமல் இருந்தால் சரிங்க.
ம.எ.சுந்தரம், புதுச்சேரி.
தெலுங்கில் கனவுக் கன்னியாக வலம் வந்த இலியானா தொடர் தோல்விகளால் தன் சம்பளத்தைக் குறைத்துள்ளார் என்ற சேதியைப் படிச்சேன். யானைக்கும் அடி சறுக்கும் என்பது உண்மை தாங்கோ...!
சு.ரவீ, திருப்பூர்.