கரு விழிக்குள் காந்தம் வைத்தது போல் ஒரே பார்வையில் எதிரில் உள்ளவர்களை வீழ்த்துகிறார் ‘மருதவேலு’ நாயகி ஆகன்ஷா. அவருடன் ஒரு பேட்டி...
உங்களைப்பற்றி ?மலையாளி அப்பாவுக்கும். பஞ்சாபி அம்மாவுக்கும் பிறந்த கலவை நான். அக்கா நேகா மருத்துவர். தம்பி அபிஜித் ஸ்கூல் படிக்கிறார். பஞ்சாப்பில் பிறந்த நான் இப்போது பெங்களூரு வாசியாகிவிட்டேன்.
சினிமாவுக்கு எப்படி ?மாடலிங் துறையில் என் கவனம் இருந்தது. பெற்றோர் கொடுத்த உற்சாகத்தில் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தேன். ‘மருதவேலு’தான் எனக்கு முதல் படம். மஞ்சு என்ற அக்மார்க் கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். முதல் படத்திலேயே என்னுடைய ஒரிஜினாலிடியைப் பார்க்க முடியும். அதற்குக் காரணம் இயக்குனர் ஆதிமுலம். அவர்தான் நடிப்புக் கல்லூரி போல் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார்.இதில் கைலாஷ் ஜோடியாக நடிக்கிறேன். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சண்முக பாண்டியனுக்கு நன்றி எப்போதும் உண்டு.
எந்த மாதிரி ரோலில் நடிக்க ஆர்வம் ?நடிப்பு என்று வந்து விட்டால் எல்லைகள் இருக்கக் கூடாது. அந்த வகையில் எல்லா விதமான ரோலிலும் நடிப்பேன். ‘பில்லா’ போல் பெரிய படங்களாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் டூபீஸ் அணியவும் தயக்கமாட்டேன். ஏன்னா சினிமா க்ளாமர் மீடியா என்பதால் லிமிடேஷன் எதுவும் கிடையாது&என்று சொல்லும் ஆகன்ஷாவுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா? மாதுரி தீட்சித்!
ரா