‘வெளுத்துக்கட்டு’ படநாயகி அருந்ததி, சென்னையில் திரைத்துறையினரின் பழக்கம் பிடிக்காததாலேயே சென்னையை விட்டு வெளியூர் சென்று குடியேறிவிட்டாராம்.
‘சிறுத்தை’ படத்தை இந்தியில் ரீமேக் செய்வது தெரிந்த செய்தி.அந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நாசர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக் கிறாராம். இந்தப்படத்துக்காக தெலுங்கில் ஒரு படத்தின் வாய்ப்பை இழந்தாராம் நாசர்.
கௌதம்மேனன் இயக்கும் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிக்க விருக்கிறதாம் ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம்.
விடுதலைப் புலி வீரர் திலீபன் வாழ்க்கையைப் படமாக எடுத்த நந்தா, முதல் கட்டப் படப்பிடிப்போடு அதை நிறுத்தி வைத்திருக்கிறாராம்.பொருளாதாரச் சிக்கல்தான் படத்தை நிறுத்திவைக்கக் காரணமாம்.
‘555’ படத்தில் பரத் ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். மலையாளியான இவர் அமெரிக்காவில் செட்டிலானவர். இவருடைய வருகைக்காக 3 மாதம் காத்திருந்து படப்பிடிப்பை துவக்கினாராம் இயக்குனர் சசி. சமீபத்தில் இந்தப் படக்குழுவுடன் தன் பிறந்த நாளைக் கொண்டாடிய பரத்துக்கு அவருடைய தங்கை ப்ரீத்தி, ப்ளாக் பெர்ரி செல்ஃபோன் பரிசளித்துள்ளார்.
தமிழ்ச் சங்கங்கள் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்வதற்காக வருடத்தில் நான்கைந்து முறையாவது வெளிநாடு செல்கிறாராம் காமெடி நடிகர் பாண்டு.
தான் நடிக்கும் படங்களில் இரண்டு மூன்று நடிகர்களுக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறார் தம்பி ராமையா.
‘தெய்வத் திருமகள்’ படத்தில் நடித்த பேபி சாராவுக்கு விலையுயர்ந்த வாட்ச் பரிசளித்துள்ளாராம் அனுஷ்கா.
தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தலா இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார் இசைஞானி.
அ