‘தேநீர் விடுதி’ படத்தின் மூலம் இயக்குனராகியுள்ள எஸ்.எஸ்.குமரன் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ உள்பட அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கவுள்ளார்.
தீவிர டயட்டில் இருக்கும் ஹன்ஸிகா மோத்வானி கொழுப்பு உணவுகளை தவிர்த்து வருகிறார். கொழுப்பில்லாத சாண்ட்விச், சாலட் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்.
காஜல் அகர்வாலுக்கு இந்தி நடிகைகளில் கஜோல் நடிப்பு ரொம்ப பிடிக்குமாம். இந்தி ‘சிங்கம்’ படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்த இவர் கஜோலை சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
பரதன், கீத்திகா நடிக்கும் ‘பார்க்கணும் போல இருக்கு’ படத்துக்காக 5லட்சம் பேர் பங்கேற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவில் ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார். இந்தப் படத்தை துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ளார்.
‘திருப்பங்கள்’ படத்தில் நந்தா ஜோடியாக நடிப்பவர் சுர்வின் சாவ்லா. இவர் டி.வி.ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஜோடியாக நடனமாடியவர்.
‘பயணம்’ படத்தில் நடித்த பூனம் கவுர் ‘வேட்டை மன்னன்’, ‘வெடி’ படங்களில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார்.
‘கந்தகார்’ படத்தில் பாலிவுட் ஸ்டார்கள் அமிதாப்,சுனில் ஷெட்டியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்கிறார் ‘நாடோடிகள்’ அனன்யா.
தன்னுடைய மேக்கப் மேன், உதவியாளர்களுக்கு கஞ்சத்தனம் பார்க்காமல் உடை, நகை என்று அவ்வப்போது தாராளமாக செலவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அனுஷ்கா.
படப்பிடிப்புக்காக எந்த ஊர் சென்றாலும் தன்னுடைய ஊர் கேரளா ரைஸ், இறால் மீனை மறக்காமல் உணவில் சேர்த்துக் கொள் வாராம் அசின்.